இரண்டாவது குழந்தை வேண்டும் என்று ஏன் நினைத்தேன் என கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் சென்ற 2011ம் வருடம் ஜூலை மாதம் 3-ம் தேதி ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது உமையாள் என்கின்ற மகளும் கந்தன் என்கின்ற மகனும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தன் குழந்தைகள் குறித்து கார்த்தி பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, ஒரு பொண்ணு போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் எனக்கு உடம்பு சரியில்லாமல் போன பொழுது என் தங்கச்சி பிருந்தா தன் குழந்தைகளை கூட பார்க்காமல் வந்து என் மகளை பார்த்துக் கொண்டார். என் மனைவிக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லை. நானும் கூட போய் உட்கார முடியாது. உமையாளை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகணும். என் மனைவியின் தம்பி வந்து மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு இரு வாரங்களில் திருமணம். அப்பொழுது தான் இன்னொரு குழந்தை வேண்டும் என நினைத்தேன். கந்தன் வந்தார் என கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் கார்த்தியை பாராட்டி உள்ளார்கள்.