Categories
மாநில செய்திகள்

ஒரு கையில் கொடுத்து…. மறு கையில் பறிப்பது என்ன நியாயம்…? – அன்புமணி கேள்வி…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், நேற்று ஒரு நாளில் மட்டும் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்ட அவர், 3/4 கடைகள் மட்டுமே திறந்துள்ளது. ஆனால் வணிகம் மட்டும் இரண்டு மடங்கு நடந்திருக்கிறது என்று கூறிய அவர், அரசு மக்களை மதுவுக்கு அடிமையாகி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா நிதியுதவியாக 4,200 கோடி வழங்கி 165 கோடிக்கு மது விற்று ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |