Categories
உலக செய்திகள்

ஒரு கைல தடுப்பூசி போட்டுட்டு… இன்னொரு கைல பீர் வாங்கிட்டு போங்க… அசத்தல் ஆஃபர்.. !!!

குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவச மதுபானம் வழங்குகிறது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் உணவகம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சாரி தலை காட்டினால் இலவச பீர் வழங்கப்படும் என கூறியுள்ளது. மேலும் ஜான் விஷன் என்ற அமைப்பு ஒன்று தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்று வேளை இலவசமாக உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |