சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வினோதமான சம்பவம் நடந்து வருகிறது. அமெரிக்க இளைஞர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் இலவசமாக பீர், டோனட், பாப்கார்ன் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.