தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினர். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.
இந்நிலையில் தினமும் தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டு நான் வருகிறேன், வருகிறேன் என நாடகம் நடத்திக் கொண்டு வேஷம் போட்டுக்கொண்டு அதிமுகவை ஏமாற்றிவிடலாம் என்ற சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.ஏமாற்றி ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கும் எண்ணம் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கும் வரை நிறைவேறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.