Categories
தேசிய செய்திகள்

“ஒரு கோடி ரூபாய் மதிப்பில்”…. தம்மம்பட்டியில் பிரம்மாண்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தில் தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி அமைந்திருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் மர சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. தம்மம்பட்டி மட்டுமல்லாமல் செந்தாரப்பட்டி, செங்கவல்லி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய கைவினை குழுவில் சுமார் 300 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே மர சிற்பங்களின் வர்க்கத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த சூழலில் கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது மரச்சிற்ப வேலைப்பாடு செய்யும் கைவினைக் கலைஞர்களின் நலனுக்காக  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரச்சிற்ப கைவினை கிராமம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மரச்சிற்பக்கலை கிராமம் அமைப்பது தொடர்பாக கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தம்மம்பட்டிக்கு  நேரில் சென்று அங்குள்ள காந்திநகரில் ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து மரச்சிற்ப கலைஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷோபனா, மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் போன்றோர் உடன் இருந்துள்ளனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதாப் யாதவ் தம்மம்பட்டி பகுதியில் மரச்சிற்ப கைவினை கிராமம் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் கைவினைக் கலைஞருக்கான வேலை கொட்டகைகள் மேம்படுத்தப்பட்ட கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், உள்ளூர் கைவினைஞர்களின் நலனிற்காக கைவினை கிராமத்தில் சாலைகள், தெருவிளக்குகள், நடைபாதைகள் கைவினைஞர்களுக்கான உற்பத்திக் கூடம், விற்பனை காட்சியகம் மற்றும் வாங்குவோர் விற்போர் சந்தை போன்றவை அமையும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |