சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில் பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், சமூகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் கடமையும், பொறுப்பும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதோ அங்கே சட்டங்கள் இயற்றப்பட்டு முறையாக பின்பற்றப்படுகிறது. அங்கே சட்டங்கள் ஏற்கப்பட்டு, முறையாகப் பின்பற்றப்படுகின்றன. அதன் காரணமாக அந்தச் சமுதாயம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு சட்டம் நியாயமற்றது என்றால் அதற்கு கீழ்ப்படிய மறுப்பது உரிமை எனக் கருதப்படும் என்று தாமஸ் ஜெபர்சன் அவர்களும், மகாத்மா காந்தியடிகளும் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையை சேர்ந்தவர்களின் தியாகத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. ஆனாலும் அவர்கள் நாம் காட்டும் நன்றியின் அடையாளமாக அனைத்து காவலர்களுக்கும் தலா 5,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய அரசு தான் இந்த அரசு என்று கூறியுள்ளார்.