கடலூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநல்லூர் கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் குட்டி, முத்துராஜா, துரை, சபரி ஆகியோர் பிரேம்குமாரின் கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது பிரேம்குமார் சிகரெட் இல்லை என கூறியதால் கோபமடைந்த குட்டி, முத்துராஜா, துரை, சபரி உள்ளிட்ட 25 பேர் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துராஜா, குட்டி உள்பட 25 பேர் மீதும் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.