Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு சிறந்த வீரரின் மருத்துவ செலவுக்கு கூட உதவவில்லை” கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி. இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷகீன்சா சிகிச்சைக்காக லண்டன் சென்றதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. ஆனால் தற்போது ஷகீன்சாவின் காயம் குணமானதால் டி20 உலக கோப்பை விளையாட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட் புக் செய்து லண்டனுக்கு சென்றார்.

அங்கு ஹோட்டலில் தங்குவது, உணவு மற்றும் மருத்துவ செலவு என அனைத்தையுமே ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் தான் செலவு செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஓரிருமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்றார். ஏற்கனவே டி20 உலக கோப்பையில் அணித்தேர்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ‘தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு’ என முன்னாள் வேகபந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ள நிலையில், கிரிக்கெட் வாரியம் மீது ஷாகித் அப்ரிடியும் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |