Categories
தேசிய செய்திகள்

ஒரு சிலிண்டருக்கு ரூ.100 தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பேடிஎம் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ஐந்து முறை உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பேடிஎம் ஆப் மூலமாக சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்து வாங்கினால் சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் முன்பதிவு செய்தால் உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பேடிஎம் ஆப்மூலமாக முதன்முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |