தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து இதுதொடர்பாக கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது. மேகதாது அணையை கைவிட மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.