நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதைப்போல பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இந்திரகுமார். இவருடைய மகள் நர்மதா(20) கோயம்புத்தூர் நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த நர்மதாவின் தோழி ஒருவர் இந்த நம்பரில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வருகிறது என்று ஒரு நம்பரை கொடுத்து அவரிடம் பேசு என்று கூறியுள்ளார். இதையடுத்து நர்மதா அந்த செல் நம்பருக்கு போன் செய்து விவரம் கேட்டபோது, கோகுல் என்பவர் நர்மதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு வளர்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து கோகுல் நர்மதாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்னுடன் வந்து விடு என்று கூறியுள்ளார். இதனால் கம்பெனியிலிருந்து வீட்டிற்கு வந்த நர்மதா, பெற்றோருக்கு ஏதாவது ஸ்வீட் வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடியபோது, “நர்மதா போன் செய்து நான் ஒருவரை திருமணம் செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 5 மாதங்களுக்கு பின்னர் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்த நர்மதா, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து 5 மாதம் மற்றும் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கோகுல் தன்னை போன்று பல இளம் பெண்கள்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதுகுறித்து நர்மதா கேட்டபோது பதில் ஏதும் சொல்லாமல் என் அம்மா வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று ஓடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 2 மாத குழந்தை உள்ள நிலையில், கோகுல் இன்னும் பார்க்க வராததால் நர்மதா திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெற்றுக் கொண்ட காவல்துறை விசாரிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். தற்போது கோகுல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக வெளியாகிய தகவல் போலீசார் விசாரணையில் தெரியவரும்.