இந்த உலகத்தில் முதல் சைக்கிளை உருவாக்கியது பிரான்ஸ் நாடு தான். ஆனால் இப்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய மாடல் டிசைன் சைக்கிளை உருவாக்கியது இங்கிலாந்து. ஆனால் இந்த உலகத்திலேயே மிக நீளமானது இந்த பைசைக்கிள் தான். இந்த சைக்கிளில் கிட்டத்தட்ட 35 பேர் பயணம் செய்யலாம். 117 அடி 5 இஞ்ச்நீளம் கொண் டுள்ள உலகின் மிக நீளமான சைக்கிளில் இரண்டு சக்கரங்களில் மட்டுமே இயங்குகின்றது. இரண்டு நபர்களால் இயங்கும் வகையில் மிக இலகுவான இடையில் உறுதியான பாதங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிளின் முன் புறத்தில் கைப்பிடியை பயன்படுத்த ஒருவரும் பின்புறத்தில் பெடல் செய்ய ஒருவரும் இருந்தால் மட்டும் போதுமானதாகும். இந்த சைக்கிள் மிக நீளமானதாக இருந்தாலும் பெடல் செய்வதற்கு மிக எளிமையாகவும் சைக்கிளின் நிலைப்புத்தன்மை யிலும் எவ்வித பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகின் மிக நீளமான சைக்கிள் ஆக இடம் பிடித்துள்ளது.