தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனை முடிந்து உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார். அதில் தமிழக அரசைப் பொருத்த வரைக்கும் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு மாதத்திலும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் பரவல் இன்றைக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. கொரோனா தடுக்கப்பட்டு இருக்கின்றன. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றன.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைக்க கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். நியாயவிலை கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை வழங்கப்பட்டதோடு அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டிருக்கின்றன.
மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். மாண்புமிகு அம்மாவின் அரசு ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசம் வாங்க முடியாத ஒரு சூழல் இருந்தாலும் அதை அரசாங்கமே வழங்கலாம் என்று அறிவித்து கொடுத்துள்ளது. அதை நான் துவக்கி வைத்து இருக்கின்றேன். முதற்கட்டமாக எல்லாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லோருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் நியாய விலை கடை மூலமாக வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேளாண்மை எவ்வித தடையும் இல்லாமல் இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் டெல்டா மாவட்டங்களில் குறித்த நேரத்தில் நாம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு இருக்கின்றோம். 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, இன்றைய தினம் அதையும் மிஞ்சி 3 லட்சத்து 54 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய உள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு வரலாற்றுச் சாதனையை அரசு நிகழ்த்தி இருக்கிறது.
இதற்கு காரணம் டெல்டா பகுதியில் இருக்கின்ற கால்வாய்கள் எல்லாம் சரியாக தூர்வாரிய காரணத்தினாலே… குறித்த காலத்தில் தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்று அடைந்த காரணத்தினால்…. குறுவை சாகுபடி இன்றைக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்து 54 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கின்றேன். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் முழுமையாக கிடைக்கின்றன, தடையில்லாமல் கிடைக்கின்றன, குறைந்த விலையில் கிடைக்கின்றன. 100 நாள் வேலை திட்டம் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அறிவித்த குடிமராமத்து திட்டம் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 85 சதவீத பணிகள் நிறைவு பெற்று விடுகின்றன. பருவமழை துவகுவதற்குள் எஞ்சிய 15% பணிகளும் நிறைவடைந்து. பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை ஒரு சொட்டு நீரும் வீணாகாமல் சேமித்து வைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.