தமிழகத்தில் சில திரையரங்குகளில் சட்டவிரோதமாக மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் விலை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதால், ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் சிலர், தமிழகத்தில் சில தியேட்டர்களில் சட்டவிரோதமாக மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட்டின் விலை 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.