Categories
உலக செய்திகள்

ஒரு டோஸ் போட்டாலே போதும்…. 80% கொரோனாவுக்கு எதிராக போராடும்…. தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்…!!!

உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகளை போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி குறித்த பரிசோதனையில் மற்ற தடுப்பூசிகளை போல இரண்டு டோஸ்கள் போடா தேவை கிடையாது. ஒரே டோஸ்லேயே கொரோனாவுக்கு எதிராக 80 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளது. மேலும் இது உருமாற்றம் அடைந்த அனைத்து கொரோனா வைரசுகளுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |