Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைபட்சமாக செயல்படுறாங்க” போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையத்தில் இருக்கும் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது உடையார் பாளையத்தைச் சேர்ந்த இளவரசன், அஜித்குமார், பழனி, வீராச்சாமி, தமிழரசன் உள்பட 10 வாலிபர்கள் கோஷமிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கரன், ஆகாஷ் ஆகியோருடன் இளவரசன் உள்பட 10 பேரும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாஸ்கர் அபிமன்யு, தினேஷ், ஆகாஷ் மகேஷ்பாபு ஆகியோர் இளவரசன் தரப்பினரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இளவரசனை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி இளவரசனின் நண்பர்களும், உறவினர்களும் உடையார்பாளையம்- பரணம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |