முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு தாயின் உணர்வுகளையும், கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார.