முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி இன்று ட்விட்டரில் இன்று பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஆதரவையும் பதிவு செய்துள்ளார். ஒரு தாயின் 30 வருட போராட்டத்திற்கு நீதி கிடைக்கும் நேரமிது என்று பதிவு செய்துள்ளார்.