Categories
மாநில செய்திகள்

“ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம்”…. அடுத்த வருடம் முதல் சென்னையிலும் அறிமுகம்….!!!!

சென்னையில்,ஜனவரி மாதம் முதல் “ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம்” துவங்க இருக்கிறது. இதனை அடுத்து மொபிலிட்டி கார்டின் பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம், NCMC கார்டின் மூலமாக மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து விதமான போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம். மேலும் ஷாப்பிங் செய்வதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைக்கும் , பயன்படுத்தலாம். அதனைத் அடுத்து வங்கி பண பரிமாற்றம் ஷாப்பிங் பயண டிக்கெட் போன்ற பலவிதமான சேவைகளை ஒரே கார்டில் பெறும் வகையில் இருப்பதனால் அவை மொபிலிட்டி கார்ட் எனப்படும்.

ஒரு தேசம் ஒரு அட்டை திட்டம் சென்னையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு சுருக்கமாக NCMC ஒரு தேசம் ஒரு கார்டு என்ற அடைமொழியுடன் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கார்டை பயன்படுத்த அவசியமில்லை. மொபிலிட்டி கார்டு வைத்திருந்தால் மட்டும் போதுமானது. பணப்பரிவர்த்தனை மற்றும் பயணம் செய்வது, ஷாப்பிங் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே டெல்லியில் அறிமுகப்படுத்திய இந்த மொபிலிட்டி கார்டை 2022 ஜனவரி மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி இதைப் பற்றி பேசும் போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த இரண்டு கார்டு குறித்தும் விளக்கியுள்ளார். மேலும் இந்தப் புதிய சிஸ்டத்தை புது வருடம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |