Categories
சினிமா

ஒரு நல்ல படத்திலிருந்து தான் இப்படி வரும்…. டிரைக்டர் வெற்றிமாறன் ஓபன் டாக்…..!!!!

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “பைரவா” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அம்முஅபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் ஆகிய படங்கள் மிகப் பெரும் வெற்றியடைந்தது. இதன் வாயிலாக இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகிய யானை திரைப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இயக்குனர் மணி பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்டரி படத்தில் அம்முஅபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்து இருக்கிறார். இவர்களுடன் தீபக்செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்து உள்ளது. பேட்டரி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக்கொண்டார்.

அதன்பின் விழாவில் பேசிய வெற்றிமாறன், இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து மணிபாரதியை தெரியும். இந்த படத்தை முடித்துவிட்டு படம் பார்க்க கூறினார். ஆனால் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இத்திரைப்படத்தை பார்த்து இருந்தால் அவர் கூறியதுபோன்று இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். இதை தற்போது பிவிஆர் வெளியிடுகின்றனர். நான் வெளியிடுவதை விட இந்த படம் தற்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இந்த படத்திற்கு நல்லது என்றுதான் நினைக்கிறேன். இதனிடையில் இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும்போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் உள்ளது. ஒரு நல்ல படத்திலிருந்து தான் இது போன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இயக்குனர் மணி பாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். அத்துடன் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்று பேசினார்.

Categories

Tech |