Categories
உலக செய்திகள்

ஒரு நாட்டுக்கு கூட இப்படி ஆனதில்லை…. எங்களுக்கு மட்டும் ஏன் ? சிங்கமாக வலம் வந்த அமெரிக்கா…. சரிந்தது எப்படி ?

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களை அதிர வைத்துள்ளது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதமாக உலக நாடுகளை தன்னுடைய பிடியில் வைத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ்.  எங்களிடம் அனைத்து வசதிகளும் இருக்கிறது…. நாங்கள் தான் உலக அளவில் டாப் என்று சொல்லிக்கொள்ளும் உலக வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகளவில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் தொடக்க காலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு கட்டுக்குள் இருக்கிறது.

பிப்ரவரி  மாதம்:

அமெரிக்காவில் கொரோனா கடந்த பிப்ரவரி  மாதம் தொடங்கி தற்போது வரை பலிகளையும், பாதிப்புகளையும் அரங்கேற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு என்ன காரணம் ? இன்னும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அமெரிக்க அரசு தவறி விட்டதா ? என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், கொரோனாவின்  கோர தாண்டவத்தில் இருந்து எப்படி மக்களை காப்பாற்றுவது ? எப்படி கட்டுப்படுத்துவது ? என்று தெரியாமல் அமெரிக்கா திணறிக் கொண்டிருக்கிறது.

மூன்று மாதம்:

உலக அளவில் வளர்ச்சி அடையாத, வளர்ச்சி குறைந்த நாடுகள் கூட கொரோனா வின் தாக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. குறிப்பாக தொடங்கிய  மூன்று மாதத்திற்கு அதன் தாக்கம் அதிகரித்து, அந்த காலங்களில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, விழிப்புணர்வு அடைந்து, சுதாரித்துக் கொண்டு அதன் பரவலை குறைத்து வருகின்றன. இது தான் உலக அளவில் இருக்கும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.  இவையெல்லாம் தெரிந்தும், வளர்ந்த நாடான  அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலையா?என்று அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

32 லட்சம் பேர்:

இதுவரை இல்லாத அளவாக தினம்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தினம் தோறும் 50 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 848 ஆக அதிகரித்தது, நேற்று 61 ஆயிரத்து 67 ஆக பாதிப்பு இருக்கின்றது. இதனால் அமெரிக்காவின் மொத்த பாதிப்பு 32 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. 14 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் ஒரு கோடியே 23 லட்சம் பேருக்கு நோய் தொற்றி உறுதி செய்யப்பட்டு 71 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 57 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

2 நாளில் லட்சம் கடந்த பாதிப்பு:

தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா  வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது ? என்பது தெரியாமல் ட்ரம்ப்  நிர்வாகம் திணறி வருகிறது. இந்த கொரோனாவால் அமெரிக்காவில் வருகின்ற தேர்தலில் ட்ரம்ப் செல்வாக்கு சரிகிறது சென்று அங்குள்ள கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 1,22,915 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நேற்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 2,22,825 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |