Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரு நாணயத்திற்கு 2 பக்கம்…. “தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்”…. சச்சின் ஆறுதல் ட்விட்.!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியால் விக்கெட் இழப்பின்றி 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருப்பதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் சில ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் உண்டு, அதுபோல வாழ்க்கைக்கும் 2 பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடினால், நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |