உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதற்காக பல பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி சில நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் சீனா சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி அளித்து வருகிறது.
இந்த வருட முடிவுக்குள் சீனாவில் உள்ள 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் வேகம் காட்டுகின்றனர். மேலும் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், பெரு நிறுவனங்கள் என அனைத்து வழிகளிலும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.