பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய்.
பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
பச்சை மிளகாயில் ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
பச்சை மிளகாய் பயன்கள் :
பச்சைமிளகாய் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் பச்சைமிளகாய் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் எனும் பொருள் உள்ளது. புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. பச்சை மிளகாய் சேர்த்த உணவு உட்கொள்ளுதல் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்று நோயிலிருந்து விடுபட உதவும்.
பச்சை மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். திடமான பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவைப்படும் கால்சியம் பாலில் இருந்து கிடைக்கிறது. ஆனால் சிலருக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜியாக இருக்கும். அதே பாலில் உள்ள கால்சியம் பச்சை மிளகாயில் உள்ளது.
மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் உடல் எடை குறையும்.
அல்சர் உள்ளவர்கள் மிளகாயை எடுத்துக்கொள்ள கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் மிளகாய் அவனது வயிற்றில் பாதுகாப்பான ஜூஸ்களை சுரக்க உதவி புரிந்து அதன் மூலம் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்களை கொன்று அல்சர் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.