புதுவையில் பிப்-16 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி-16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிப்ரவரி-14, 15ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.