Categories
உலக செய்திகள்

ஒரு நிமிடத்தில் மொத்த பணமும் போச்சு… கோடிஸ்வரியிடம் பேசிய நபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஹாங்காங்கில் பிரபல கோடீஸ்வரியை அமலாக்க துறை அதிகாரி போல பேசி கோடி கணக்கில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவில் ஹாங்காங்கை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரி ஆன 90 வயதான பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ஒரு அமலாக்கத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இதன்பின் சீனாவின் கடுமையான கிரிமினல் வழக்கில் உங்கள் அடையாளம் இருப்பதாகவும், உங்களிடம் உள்ள பணத்தை விசாரணைக்காக மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். விசாரணை முடிந்தபின் உங்களிடம் பணம் வந்து சேர்ந்துவிடும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதனை நம்பி அந்த கோடிஸ்வரியான 90 வயது பெண் தன்னிடம் இருந்த £23 மில்லியன் பணத்தை அவன் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் ஏமாற்றியது அப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இத்தகைய மோசடி செய்தது 19 வயது மாணவன் என கடந்த மாதம் தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அந்த மாணவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடமிருந்த £830,000 மதிப்பிலான வங்கிக் கணக்கை முடக்கி உள்ளனர். மேலும் மீதி பணம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஹாங்காங்கில் இதுபோன்ற தொலைபேசி அழைப்பின் மூலம் மோசடிகள் அதிகமாகி வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |