வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திரங்கள் பெரியார் அரசு கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றது.
மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேவதானம்பட்டி, புதுப்பாளையம், மஞ்சகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரியார் அரசு கல்லூரியிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு அதிகாரிகள் ஜெனரேட்டரை இயக்கவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த தி.மு.க பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிர்வாகிகள் கல்லூரி முன்பு வந்து நின்று ஜெனரேட்டரை இயக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் சுமார் 15 நிமிட தாமதமாக மின்துறை அதிகாரிகள் ஜெனரேட்டரை இயக்கி உள்ளனர். இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து சென்றதால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.