அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “தமிழகத்திற்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் தற்போது கையிலிருக்கும் நிலக்கரியினை மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசானது பகிர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் 60 ஆயிரம் டன் நிலக்கரியினை தினமும் எடுத்து வருகிறோம். மின் உற்பத்தியானது தமிழ்நாட்டில் 43 சதவீதத்திலிருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியானது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின்வெட்டானது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஒரு வினாடி கூட ஏற்படாது. தமிழகத்தை முதலமைச்சர் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே தமிழ்நாட்டில் ஒரு பொழுதுகூட ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்க கூடாது என்று கண்டிப்புடன் உத்திரவிட்டுள்ளார்” என்று கூறினார்.