Categories
மாநில செய்திகள்

ஒரு பணியாளருக்கு ரூ.24,000… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் மானியமாக அரசு வழங்கும் என முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 67 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் புதிய தொழில் கொள்கை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதனையடுத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் 50 லட்சத்திலிருந்து 1.50 கோடியாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை தமிழக அரசே வழங்கும். ஆண்டுதோறும் ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக 24 ரூபாய்க்கு மிகாமல் மானியமாக அரசு வழங்கும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |