மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். தற்போது நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஒரு பாதி சிவன், மறுபாதி சக்தி என அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.