Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஒரு பெரிய பை நிறைய சாக்லேட் கொண்டு வந்த வித்தியாசாகர்…. “என்னை பெரிதும் கவர்ந்தது”…. பேட்டியில் கூறிய மீனா….!!!!!

முதல் முறையாக மீனாவை பார்க்க வந்த பொழுது வித்யாசாகர் செய்ததுதான் மீனாவை மிகவும் கவர்ந்தது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் சென்ற 2009 ஆம் வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிக்கா என்ற மகள் இருக்கின்றார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னதாக மீனா கலந்து கொண்ட பொழுது அவரிடம், அப்பா அம்மா பார்த்த பையனை தான் திருமணம் செய்து கொண்டீர்கள்.

ஆனால், அவரை பார்த்ததும் முதலில் வேண்டாம் என சொல்லிவிட்டு பின்னர் ஓகே என சொன்னீர்கள். இது பற்றி கூறுங்களேன் என கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஆமாம் அப்படி தான் நடந்தது. ஜாதகம் பார்த்தவர் இதைவிட நல்லது அமையுமே என கூறினார். இதனால் உடனே வேண்டாம் என சொல்லி விட்டேன். பிறகு என் ஆன்டி பேசி தான் எல்லாம் நடந்தது. வேலை விஷயமாக வித்தியாசாகர் சீனாவுக்கு சென்று பின்னர் சென்னைக்கு வந்த பொழுது முதல் முதலாக என்னை சந்தித்தார். அப்பொழுது அவர் ஒரு பையுடன் வந்தார். அந்த பை முழுவதும் சாக்லேட் இருந்தது. எனக்கு சாக்லேட் என்றால் ரொம்ப பிடிக்கும். அதை தெரிந்து கொண்டு வாங்கி வந்தது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. எனக்காக இவ்வளவு செய்தாரே என தோன்றியது என கூறினார்.

Categories

Tech |