Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்…. மாநில உரிமைகள் முக்கியம்… தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை  நடைபெற்றது.  மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், ஒவ்வொரு வீடுகளுக்கும் இலவசமாக 100 யூனிட்  கொடுக்கும் திட்டம் பாதிக்கப்படும் என சொல்லப்பட்டது.

இந்த புதிய வரைவு சட்டத் தால் நேரடியாக பல்வேறு விதமான பாதிப்புகள் மாநில அரசுகளுக்கு ஏற்படும் என்று விளக்கிய தமிழக முதல்வர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர் கே சிங்கிடம் வழங்கினார். அந்த மனுவில் இந்த சட்டம் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விஷயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல இதனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்ற விஷயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |