தேனி மாவட்டத்தில் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே அவர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு யாரும் வருகிறார்களா என சுற்று முற்றும் பார்க்கின்றார். அதன் பிறகு கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம் செய்து கேரளா காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய போலீசாரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள்.