தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், மாற்று பொருளாதார பெருக்கத்திற்கு அரசு திட்டமிடனும்… இல்லன்னா எங்களை போல பிள்ளைகளைக் கூப்பிட்டு கேட்கணும்… வாங்க என்ன செய்யலாம் அப்படின்னு? நிறைய பொருளாதார மேதைகள் இருக்கிறாங்க…. ஜெயரஞ்சன் போன்றவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பொருளாதார மேதைகள் ஒவ்வொன்றும்சொல்லும் போது நமக்கு வியப்பா இருக்கு. அப்படிப்பட்ட பேரறிஞர் களை வைத்துக் கொண்டு திட்டமிடனும்.
அதை விட்டுட்டு ஏற்கனவே பணியில் அமர்த்தி உள்ளவர்களை வேலை நீக்கம் செய்தால் அது பெரும் போராட்டம் வெடிக்கும், அது தேவையில்லாத சிக்கலை உண்டாக்கும்.இனிமேல் அரசு வேலைக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்து விட்டு, இருப்பவர்களை வைத்து பணியை செழுமையாக செய்து பொருளாதாரத்தை பெருக்குவதற்கான திட்டங்களை வகுக்கணும்.
கேஸ் விலை 150ரூபாய் அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், ஏறு ராட்டி, பருத்தி மாறு, எருகு மாறு, சோளத்தட்டை, எள்ளு மாறு, அகத்தி மரம், காடுகளில் உடைந்து விழுகின்ற கிளைகளை கொண்டு தான் அடுப்பில் சமைத்தோம். அப்போ அந்த அடுப்புச் சாம்பல் வச்சுதான் பல்லு விளக்கினோம். இப்போ சொல்றான் உங்க பற்பசையில் சாம்பல் இருக்கா ? உப்பு இருக்கா என சொல்லுறாங்க. உப்பையும், சாம்பலையும் வைத்து விளக்கினோம்.
அதிலிருந்து டெவலப்னு சொன்னாங்க…. வளர்ச்சி என சொன்னாங்க…. என்னடான்னா எரிவாயுக்கு வாங்க என சொன்னார்கள். வளர்ச்சி என சொன்னார்கள். நாங்க ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு ரேஷன் கடையில் போயிட்டு அரிசி, மன்னனை, பருப்பு வாங்கிட்டு சமைத்து சாப்பிட்டோம். இப்போ சிலிண்டர், கேஸ் எரிவாயு இணைப்பு வச்சிருக்கிற வங்களுக்கு குடும்ப அட்டை கிடையாது, ரேஷன் கிடையாது அப்படின்னு சொல்றான்.
நாங்க சிலிண்டர் தொறந்து ஒரு மடக்கு குடிச்சிட்டு படுத்துறதா ? என்னமா ஒரு வளர்ச்சி. இந்த எரிவாயு கொடுக்கத்தான் என் தாய் நிலத்தில் வந்து மீத்தேன் எடுக்குறீங்க… ஈத்தேன் எடுக்குறீங்களா ? ஒருத்தர் கேட்டார் என்னிடம் இதையெல்லாம் எடுக்காமல் எப்படி சீமான் சமைக்கிறது ? இதையெல்லாம் எடுத்துட்டா எதைத்தான் சமைக்கிறது ? என்னவோ ஒன்னு… நீங்க சொல்றீங்க… நாங்க கேட்கிறோம்…. உங்க டெவலப்பை பார்க்கிறோம்…. ஒரு நாள் டெவெலப் டயர் மாதிரி வெடிச்சி சிதற வில்லை என்றால் என்ன கேளுங்க என சீமான் ஆவேசமடைந்தார்.