சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 50 பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பு நடவடிக்கையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 40 முதல் 50 பேருக்கு போடப்படுகிறது.
இங்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. அதன்பின் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகிறார்கள். அதன்பிறகே அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார்.