பீகாரில் ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிதீஷ்குமார் முதலமைச்சராக மாறி உள்ளார் .
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதத்துடன் மீண்டும் நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்தார். சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மகாபந்தன் கூட்டணி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி உள்ளிட்ட கட்சிகள் துணை நிற்கின்றன. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற இடங்களில் 160 உறுப்பினர்களின் ஆதரவு நிதீஷ்குமாருக்கு உள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 45, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்.எல்.ஏக்களை சேர்த்து புதிய கூட்டணிக்கு சுமார் 160 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் பீகாரில் மொத்தம் உள்ள 243 எம்எல்ஏக்களில் சுமார் 160 பேரில் ஆதரவு ஐக்கிய ஜனதா தளம் ஆர் ஜேடி கூட்டணிக்கு உள்ளது. இந்த மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதீஷ் குமார் தேர்வானார். இந்த கூட்டணியின் மூலமாக பெரும்பான்மை பலம் உள்ளதால் மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பீகார் மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க நிதீஷ்குமார் உரிமை கோரி உள்ளார்.