தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காவிட்டால் வருகிற 2-ம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000/- ரூபாய் வழங்க வலியுறுத்தியும்; விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அஇஅதிமுக விவசாயப் பிரிவின் சார்பில், வரும் 2.1.2023 – திங்கட்கிழமை காலை 10 மணியளவில், 2/3
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2022
இந்த அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தொகுப்பு வழங்கும் நிகழ்வை சென்னையில் தொடங்கி வைப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் திருவண்ணாமலையில் 2-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குரல் கொடுத்ததால்தான் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுபில்யில் கரும்பை சேர்த்துள்ளதாக தற்போது அதிமுக சார்பில் ஒரு ட்விட்டர் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@katpadidmk @OfficeOfKRP @r_sakkarapani @mp_saminathan pic.twitter.com/N6yuhjMdgt
— TN DIPR (@TNDIPRNEWS) December 28, 2022