கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரை தகனம் செய்ய இடமில்லாமல் சாலையில் வைத்து தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிகவும் அதிக பாதிப்பை அடைந்து வருகிறது. இதனால் மக்கள் போதிய அளவு ஆக்சிஜன் உதவி இல்லாமலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மிகவும் உச்சத்தைத் அடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். மேலும் டெல்லியில் உயிரிழந்தோரை தகனம் செய்ய இடம் இல்லாமல் சாலையில் வைத்து தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டுமே கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,000 பேரை பாதித்துள்ளது. இது எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகாத அளவிற்கு இந்தியாவில் ஒரே நாளில் இந்த உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் மரணம் அடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 115 பேர் தொற்றால் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இங்குள்ள மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதி இல்லாத காரணத்தால் ரயில்களில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையை அறிந்து பல நாடுகள் உதவ முன் வந்துள்ளனர். அதில் பிரிட்டன் அரசு 100 வெண்டிலேட்டர் மற்றும் 95 ஆக்சிஜன் சிலின்டர் இந்தியாவிற்கு அனுப்ப தயாராக உள்ளது.