Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 45 வகை…. பாரம்பரிய உணவுகளை சமைத்த சிறுமி….. குவியும் பாராட்டுக்கள்….!!

45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய்.  ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால்  ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில்  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு,  உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். இந்நிலையில் சிறுமியின் ஆர்வத்தை கண்டு வியந்த அவரது தாய் தன்  மகளை இனிகோ சாதனையில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார்.

இதன்படி அண்மையில் சென்னையில் சமையல் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுமி கேழ்வரகுஇட்லி,கேழ்வரகு புட்டு,கம்பு தோசை ,இறால் வறுவல் ,மீன் உட்பட 45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்திற்குள் சமைத்து சாதனை புரிந்துள்ளார். மேலும் சாய் சமைத்த அனைத்தும் தமிழரின் பாரம்பரிய உணவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இச்சிறுமியை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Categories

Tech |