Categories
மாநில செய்திகள்

ஒரு மணி நேரம் அனுமதி குறைப்பு…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக – கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏப்ரல் 16ம் தேதி சித்ரா பௌர்ணமி நிகழ்வு கொண்டாடப்படுகிறது. வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனுமதி நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி ஒரு மணி நேர வழிபாட்டைக் குறைத்துள்ளனர். கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு மணி நேரம் அனுமதி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |