தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது.
பின்னர் மாலை 3 மணிக்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதை தொடர்ந்து மாலை மூன்று முப்பது மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.