ரவீந்தர் சந்திரசேகரனும் மகாலட்சுமியும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது.
சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி.
திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இவர்கள் மகாபலிபுரம் ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றார்கள். ரவீந்தர் ப்ரொடக்சன் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதுதான் மகாலட்சுமிக்கு அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. மேலும் காதலிக்க ஆரம்பித்த ஒரே மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால் மகாலட்சுமி சென்ற 2021 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ரவீந்தருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து சுயநலமில்லா இதயத்திற்கும் என் நண்பர் ரவிக்கும் சைஸ் முக்கியமில்லை எனக் கூறினார். அதைப் பார்த்தவர்கள் buddy என்பதை hubby என நினைத்து விட்டோம். இவரைத்தான் காதலிக்கிறார்களா என அப்பொழுதே கேள்வி கேட்டார்கள். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்துள்ளார்கள். தற்பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். காதல் என்று வந்து விட்டால் வயதாவது சைஸாவது என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.