உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் எலான்மஸ் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒரு நாளைக்கு 32 கோடியை இழக்கும் போது வேறு வழியில்லை என கூறியுள்ளார். இந்த சூழலில் ட்விட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு எட்டு டாலருக்கான சந்தா சேவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் புதிய உரிமையாளர் எலான்மஸ் இயங்கு தளத்தின் சரிபார்ப்பு முறையை மாற்றி அமைத்தால் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு இப்போது ப்ளூடிக் மார்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களுக்கான புதுப்பிப்பின் தற்போது பதிவு பெரும் பயணங்கள் நீங்கள் ஏற்கனவே பின் தொடரும் பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளை போலவே அவர்களின் பெயருக்கு அடுத்ததாக ப்ளூடூத் சரிபார்ப்பு அடையாளத்தை பெற்றுக் கொள்ளலாம் என twitter கூறியுள்ளது.
இதற்கிடையே ட்விட்டரில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ட்விட்டர் நிறுவனம் ஜாக் டோஸி தனது பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, twitter-ல் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் எப்போதும் பணியாற்றுபவர்கள் வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள் எவ்வளவு கஷ்டமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியை கண்டுபிடிக்கின்றார்கள். மேலும் பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கின்றேன் எல்லோரும் ஏன் இந்த நிலைக்கு ஆளாகினார்கள் என்பதற்கு நான் பொறுப்பு. நான் நிறுவனத்தின் அளவை மிக விரைவாக வளர்த்தேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.