Categories
உலக செய்திகள்

ஒரு மாத குழந்தையின் தாய் கருணை கொலையா…? நீதிபதி அதிரடி தீர்ப்பு… குடும்பத்தினர் எதிர்ப்பு…!!

பிரிட்டனில் கோமா நிலையில் இருக்கும் பெண்ணை கருணை கொலை செய்ய நீதிபதி அனுமதியளித்ததற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் Addison’s நோயால் பாதிப்படைந்த 30வயது பெண்ணிற்கு 32 வார கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. மேலும் அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

இதனையடுத்து அப்பெண் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு கோமாவில் இருக்கிறார். மேலும் நீதிபதி Hyden காணொளி வாயிலாக அவசர வழக்காக இதனை விசாரித்துள்ளார். அப்போது leiester NHS அறக்கட்டளையின் பல்கலைக்கழக மருத்துவர்களிடம் அந்த பெண் குணமடைய வாய்ப்புகள் இல்லாததால் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையை சட்டரீதியாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

மேலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்காத அப்பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். மேலும் அவர்கள் முஸ்லிம் குடும்பத்தினர் என்பதனால் கடவுளால் மட்டுமே மனித உயிரை பறிக்க முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் அந்த பெண்ணின் சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவரின் நுரையீரல் மற்றும் கணையம்  செயலிழந்து விட்டது என்று நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

இதனால் நீதிபதி இந்த பெண்ணின் குடும்பம் அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அப்பெண்ணின் நிலையோ சோகத்தின் உச்ச கட்டத்தில் உள்ளது. எங்களது நோக்கம் அந்த பெண்ணின் வாழ்நாளை குறைப்பது அல்ல. அவரது மரணத்தை நீட்டிக்க வேண்டாம்  என்பது தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தினரால் அவரை கவனித்துக் கொள்ள இயலும் என்றால் அவருக்கு Palliative care சிகிச்சை திட்டம் தயாரிக்க படுகிறது என்றும் நீதிபதி கூறியுள்ளார்

Categories

Tech |