மாநிலங்களில் ஒரு விளையாட்டை ஊக்குவிக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் ஒரு மாநிலத்தில் ஒரு விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பா,ஜ,க உறுப்பினர் ஹமாமாலின் ஒரு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு விளையாட்டுத்துறை இணை அமைச்சர் நிதிஷ் பிரமானிக் பதிலளித்தார்.
அதாவது விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் ஒரே விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். இருப்பினும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.மேலும் இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என் தெரிவித்தார்.