மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். அதாவது, “மாற்றுத்திறனாளிகளின் மேல் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தொழிற்துறை சார்பாக திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்துவிடாத அடிப்படையில் பணியாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியோடு ரூ1,763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் அடுத்த 6 வருடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக” முதல்வர் குறிப்பிட்டார்.