Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு மில்லியனுக்கு நன்றி’… அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சஞ்சீவ்…!!!

நடிகர் சஞ்சீவ் தனது அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதன் பின் விரைவில் தன்னுடைய அடுத்த சீரியல் பற்றி தெரிவிப்பதாக சஞ்சீவ் கூறியிருந்தார்.

raja rani fame sanjeev karthick confirms doing a new serial in sun tv

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்கள் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த சஞ்சீவ் தனது அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு மில்லியனுக்கு நன்றி. சன் டிவியில் பிரைம் டைமில் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறேன். விரைவில் இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |