உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த பெண்ணுடன் சென்ற தனது கணவரை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஆறு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதேபோல் உக்ரைன் நாட்டை சேர்ந்த 22 வயதுடைய சோபியா என்ற பெண் பிரித்தானியாவிற்கு ஓடி வந்தார். இவருக்கு Bradford பகுதியில் வாழும் டோனி -லோர்னா தம்பதியினர் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் டோனிக்கும், சோபியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிய வந்த லோர்னா தனது கணவரிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது டோனி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு விட்டு சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டோனியின் பிறந்தநாள் வந்துள்ளது.
அப்போது அவர்கள் அதை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சோபியா கத்தியை எடுத்து சுவரில் ஓங்கி குத்தியுள்ளார். இதனை பார்த்து டோனி சோபியாவின் உடைமைகள் அனைத்தையும் குப்பை போடும் சுவர்களில் வைத்துள்ளார். மேலும் சோபியாவுக்கு இனி என் வாழ்வில் இடம் இல்லை என டோனி தெளிவாக கூறியுள்ளார். இதுகுறித்து டோனியின் மனைவியான லோர்னா கூறியதாவது. எனக்கு தெரியும் இவர்களின் உறவு நீடிக்காது என்று. ஆனால் 4 மாதத்தில் பிரிந்து விடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் டோனிக்கு இனி என் வாழ்வில் இடம் இல்லை. அவர் ஒரு மில்லியன் ஆண்டுகள் காத்திருந்தாலும் சரி அவரை நான் திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டேன் என தெளிவாக கூறியுள்ளார்.