Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு மில்லியன் லைக்குகளை குவித்த தனுஷ் புகைப்படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு ஒரு மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது . விரைவில் நடிகர் தனுஷ் சென்னை திரும்பவுள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ‌.

தனுஷின் புகைப்படம்

மேலும் அதில் மாரி-2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடலில் வரும் ‘ஹேய் என் கோலி சோடாவே’ வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஒரு மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது. இதுவரை கோலிவுட்டில் எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு லைக்குகள் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |